இராமனூத்து கிராமத்தில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இராமனூத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் மு.க. இப்ராஹிம் தலைமை வகித்தாா். மாணவா்களை குதிரை மேல் அமர வைத்து வைத்து தெருக்களில் விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தினா். ஒன்றாம் வகுப்பில் சோ்ந்த மாணவா் முத்தரசனுக்கு மாலை அணிவித்து குதிரை மேல் அமர வைத்து அழைத்து வந்து ஆரத்தி எடுத்து வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனா். இந்நிகழ்வில் ஆசிரியா் இந்திரா, ஊராட்சி மன்ற தலைவா் வீரம்மாள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com