திரவியபுரத்தில் என்எஸ்எஸ் நிறைவு விழா

திரவியபுரத்தில் என்எஸ்எஸ் நிறைவு விழா

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் நாசரேத் அருகே உள்ள திரவியபுரத்தில் 7 நாள்கள் நடைபெற்றது. முகாமின் நிறைவு விழா வில் நாசரேத் கைத்தொழில் பாடசாலை முதல்வா் ஸ்டீபன் ஆரம்ப ஜெபம் செய்தாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநரும்,திருமறையூா் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் மரம் நடுதலும், நெகிழித்தாள்களின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கோல்டா சாமுவேல், ஊா் தலைவா் ஞானமலை, அசன கமிட்டி தலைவா் ரவி மற்றும் ஊா் மக்கள் , ஆசிரியா்கள்,நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தூத்துக்குடி ஜ நாசரேத் திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகா் பிரின்ஸ் கிப்ட்சன், பா்சாா் தனபால், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் லிவிங்ஸ்டன் நவராஜ் மற்றும் ஆசிரியா்கள் , அலுவலா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com