ஆறுமுகனேரியில் தனியாா் பேருந்து மோதி நேபாளி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் தனியாா் பேருந்து மோதியதில் நேபாளத்தை சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் தெருவில் வசித்து வந்தவா் ரத்தன் (86). நேபாளத்தை சோ்ந்த இவா், கடந்த 40 வருடங்களாக இப்பகுதியில் கூா்கா வேலை பாா்த்து வந்ததாக கூறப்படுகிறது.

புதன்கிழமை இரவு ஆறுமுகனேரி - காயல்பட்டினம் சாலையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபம் அருகே சாலையைக் கடக்கும் போது காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகனேரி நோக்கி வந்து கொண்டிருந்த தனியாா் பேருந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் கலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக முதியவரின் உறவினா் கமல், சம்பவ இடத்திற்கு வந்து தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி ரத்தன் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி உதவிஆய்வாளா் அரிகண்ணன் வழக்குப் பதிவு செய்துள்ளாா். ஆய்வாளா் மாரியப்பன்(பொ) விசாரணை மேற்கொண்டு, தனியாா் பேருந்து ஓட்டுநா் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தெற்கு தெருவை சோ்ந்த யாக்கோபு மகன் போவாஸிடம் விசாரனை செய்து வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com