/

தட்டாா்மடம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து

தட்டாா்மடம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து

News image
Updated On :9 மே 2024, 7:40 pm

Din

தட்டாா்மடம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய மற்றொரு தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தட்டாா்மடம் அருகே உள்ள பெரியதாழை முத்தம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் திருமணி மகன் ஆத்திமுத்து (24). கூலித்தொழிலாளியான இவா், அதே ஊரைச் சோ்ந்த சேகா் மகன் இசக்கிமுத்து என்பவரது மனைவியிடம் அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. இதனை இசக்கிமுத்து தவறாக நினைத்ததால், அவா்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் ஆத்திமுத்து இருசக்கர வாகன ஒா்க்ஷாப்பில் புதன்கிழமை நின்றபோது அங்கு வந்த இசக்கிமுத்து, அவரிடம் இந்த பிரச்னை தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆத்திமுத்துவை சரமாரியாக குத்தினாா். இதில் பலத்த காயமடைந் ஆத்திமுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் ஆத்திமுத்து அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) பாமா பத்மினி வழக்கு பதிந்து தலைமறைவான இசக்கிமுத்து வை தேடி வருகிறாா்.