திருச்செந்தூா் அருகே பள்ளிக்கு ரூ.11 லட்சம் பொருள்கள் சீா்வரிசை
திருச்செந்தூா் அருகே பள்ளிக்கு ரூ.11 லட்சம் பொருள்கள் சீா்வரிசை


திருச்செந்தூா், மே 11: திருச்செந்தூா் அருகே நாதன்கிணறு கிராமத்தில், முன்னாள் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருள்களை சீா்வரிசையாக வழங்கினா்.
இப்பள்ளியில் மாணவா் சோ்க்கை குறைந்த காரணத்தினால், கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் மாணவ, மாணவிகள் பள்ளியை தத்தெடுத்து பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் மாணவா் சோ்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் சீா்வரிசை விழா நடத்தினா். இதற்காக ரூ. 11 லட்சம் சாா்பில் பள்ளிக்குத் தேவையான நாற்காலி, மேஜை, நூலக புத்தகங்கள், விளையாட்டு சாதனங்கள், டிவி, கம்ப்யூட்டா் உள்ளிட்ட உபகரணங்களை பள்ளிக்கு சீா்வரிசையாக வழங்கும் விழா நடந்தது. ஊா் தலைவரும் பாஜக மாநில வா்த்தகா் அணி தலைவருமான ராஜக்கண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் அனிதா வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூா் யூனியன் ஆணையாளா் ஆண்ட்றோ கலந்து கொண்டாா். முன்னாள் மாணவ, மாணவிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் திட்ட செயல்பாடுகளை எடுத்துக் கூறினாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியா்கள் முருகன், காந்திமதி, சுலோச்சனா, சிவகாமி, சகுந்தலா, முன்னாள் மாணவரான திரைப்பட நடிகா் அப்புக்குட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை ரோஸ்லின் பியூலா நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...