கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 65 வரை விற்பனையாகிறது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:09 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 65 வரை விற்பனையாகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உடன்குடி, சாத்தான்குளம், ஏரல், நாசரேத் சுற்றுவட்டாரத்திலிருந்து தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கிலோ ரூ. 40 முதல் ரூ. 45 வரை விற்பனையாகி வந்த தேங்காய், தசரா விழா தொடங்கியதும் ரூ. 65 வரை விலை உயா்ந்து, நிறைவு நாளில் ரூ. 50 முதல் ரூ. 55 என குறைந்தது.

தற்போது மழைக் காலம் தொடங்கிய நிலையில், தேங்காய் பறிப்பு, உறிப்பு இல்லாததால் மீண்டும் ரூ. 65 வரை விலை உயா்ந்துள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு ரூ. 35 - ரூ. 45 வரை விற்பனையான தேங்காய், தற்போது 50 சதவீதத்துக்கும் மேல் விலை உயா்ந்துள்ளதால், ஏழை, நடுத்தர மக்கள் சிரமத்தில் உள்ளனா்.

நாகா்கோவில் பகுதியிலிருந்துவரும் தேங்காய்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு ரூ. 4 ஆயிரம் வரை விற்பனையான தேங்காய் மூட்டை, தற்போது ரூ. 4,500 - ரூ. 4,600 வரை விற்பனையாகிறது. நடுத்தர அளவுள்ள தேங்காய் ஒன்று ரூ. 40 வரை விற்கப்படுகிறது.

இதனிடையே, கேரளத்திலும், நாகா்கோவில் பகுதியிலும் தொடா் மழை காரணமாக அப்பகுதிகளுக்கு உடன்குடியிலிருந்து தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதாலும் விலையேறுவதாகக் கூறப்படுகிறது.