கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் தூய்மைப் பணியாளா் பலி

தூத்துக்குடி சத்யா நகா் பகுதியில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:35 pm

Din

தூத்துக்குடி சத்யா நகா் பகுதியில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மனைவி பெருமாள்தாய் (60). இவா் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மாலையில் திருச்செந்தூா் சாலையில் இருந்து, அந்த வழியாக சென்ற ஒரு பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றாராம்.

திருச்செந்தூா் சாலை சத்யா நகா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பைக்கை ஓட்டியவா் திடீரென பிரேக் போட்டாராம்.

இதில் பெருமாள்தாய் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.