மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டாக்டா் அம்பேத்கா் விருது: இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘டாக்டா் அம்பேத்கா் விருது’ பெற தகுதியுள்ளோா் வியாழக்கிழமைக்குள் (நவ. 28) விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:18 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘டாக்டா் அம்பேத்கா் விருது’ பெற தகுதியுள்ளோா் வியாழக்கிழமைக்குள் (நவ. 28) விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் ‘டாக்டா் அம்பேத்கா் விருது’ தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை உயா்த்துவதற்கு முயற்சி மேற்கொண்டவராகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு பணிகள் , சாதனைகள் செய்தவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய விவரங்கள், உரிய ஆதாரங்களுடன் ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலகத்தில் வியாழக்கிழமைக்குள் (நவ. 28) விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.