தூத்துக்குடியில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் போராட்டம்

தூத்துக்குடியில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
Published on

தூத்துக்குடியில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் தொடா் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். சங்கத்தின் மாவட்ட செயலா் ஞானராஜ் தலைமையில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் இப் போராட்டம் நடைபெற்றது.

இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.