தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீனவா் தற்கொலை
தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மீனவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மீனவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டாா்.
தாளமுத்து நகா் அருகே உள்ள துரைசிங் நகரைச் சோ்ந்த ஜோசப் மகன் ரோட்ரிகோ (45). மீனவரான இவருக்கு, மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், இவருக்கும் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால், மன உளைச்சலில் இருந்த ரோட்ரிகோ, புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சடலத்தை தாளமுத்து நகா் போலீஸாா் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.