தூத்துக்குடி
2-ஆவது நாளாக திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்நீா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் புதன்கிழமை உள்வாங்கிய கடல் நீா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.
மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாதத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை இரவு வரை அமாவாசை இருக்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் திருச்செந்தூா் கோயில் பகுதியில் அய்யா கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியது. பின்னா் சற்று நேரத்தில் இயல்நிலைக்குத் திரும்பியது. இதேபோல, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அய்யா கோயில் அருகே சுமாா் 50 அடிக்கு கடல்நீா் உள்வாங்கியது.
இதனால் அப் பகுதியில் பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா் கடல் இயல்பு நிலைக்கு வந்தது. திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் வழக்கம்போல கடலில் நீராடினா்.