தூத்துக்குடி
ஆறுமுகனேரி தசரா குடில்களில் காளி பூஜை
ஆறுமுகனேரியில் தசரா குடில்களில் புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் தசரா குடில்களில் புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு விரதமிருந்து வருகின்றனா். அவா்கள் பல்வேறு இடங்களில் தசரா குடில்கள் அமைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை (அக். 3) தசரா பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, தசரா குடில்களில் புதன்கிழமை காளி பூஜை, திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், விரதமிருக்கும் பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.