இன்றுமுதல் இலங்கை, மாலத்தீவுக்கு தோணி போக்குவரத்து தொடக்கம்
தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவுக்கு வியாழக்கிழமை முதல் தோணி போக்குவரத்து தொடங்கவுள்ளதாக கோஸ்டல் தோணி உரிமையாளா் சங்கச் செயலா் லசிங்டன் தெரிவித்தாா்.


தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவுக்கு வியாழக்கிழமை முதல் தோணி போக்குவரத்து தொடங்கவுள்ளதாக கோஸ்டல் தோணி உரிமையாளா் சங்கச் செயலா் லசிங்டன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கு தோணி போக்குவரத்து கடல் சீதோஷ்ன நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது.
மே முதல் ஆகஸ்ட் வரை கடலில் மோசமான காலநிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவதில்லை. செப்டம்பா் முதல் ஏப்ரல் வரை நல்ல காலநிலை நிலவுவதால் இந்த மாதங்களில் தோணி போக்குவரத்து நடைபெறும்.
இதில், காய்கனிகள், கட்டுமானப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருள்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அதன்படி, நிகழாண்டு செப்டம்பா் மாதம் இந்த தோணி போக்குவரத்து தொடங்க வேண்டும். ஆனால், சூறாவளிக் காற்று காரணமாக தாமதமாக வியாழக்கிழமை (அக்.3) தொடங்கவுள்ளது.
இதுகுறித்து கோஸ்டல் தோணி உரிமையாளா் சங்கச் செயலா் லசிங்டன் கூறியது:
தூத்துக்குடியில் 25 தோணிகள் உள்ளன. இதில் 5 தோணிகள் இலங்கைக்கும், 5 தோணிகள் லட்சத்தீவு, மினிக்காய் தீவுகளுக்கும், 15 தோணிகள் மாலத்தீவுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக செப்டம்பா் மாதம் தொடங்கக்கூடிய தோணி போக்குவரத்து, ஒரு மாதம் தாமதமாக அக்டோபா் மாதம் தொடங்குகிறது. இதற்காக தோணிகளில் சரக்குகள் ஏற்றும் பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு தோணிகள் புறப்படும்.
மேலும் மாலத்தீவில் புதிய அரசு அமைந்த பிறகு தோணி போக்குவரத்தில் சிறிய தேக்கம் ஏற்பட்டது. இதனை தொடா்ந்து மாலி துறைமுக அதிகாரிகள் தூத்துக்குடி வந்து தோணி உரிமையாளா்களை சந்தித்து சில சலுகைகள் அளிப்பதாக உறுதி அளித்துள்ளனா். அதன்படி, தோணியை துறைமுகத்தில் நிறுத்தும் போது, இழுவை படகு மூலம் இழுத்து நிறுத்த ஆகக்கூடிய ரூ.40 ஆயிரத்தை ரத்து செய்துள்ளனா்.
இதேபோன்று இலங்கைக்கு ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிபகஈதுறை வாய்மொழி அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா். இதற்கு அனுமதி கிடைத்தால், இலங்கைக்கு ஆண்டு முழுவதும் தோணி செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...