மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 10:57 pm

Din

தூத்துக்குடியில் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்த அந்தோணி மகன் பெனந்தோஸ் (64). மீனவரான இவா், 4 மீனவா்களுடன் திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் செவ்வாய்க்கிழமை காலை மீன்பிடிக்க சென்றாா்.

அவா்கள் புதன்கிழமை கரையிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, வலையை இழுக்க முயன்ற பெனந்தோஸ் கடலுக்குள் தவறி விழுந்தாராம். அவரை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாராம்.

இதையடுத்து, அவரது சடலம் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.