ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிவத்தையாபுரம் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் அளிப்பு

சாயா்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

News image

சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் மேல்நிலைப் பள்ளி நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:35 pm

Din

சாயா்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளி தலைவா் பரமசிவன் தலைமை தாங்கினாா். செயலா் பால்ராஜ், சாயா்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவா் அறவாழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் பவானி வரவேற்றாா். சாயா்புரம் பேரூராட்சி தலைவா் பாக்கியலட்சுமி அறவழி,

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். ஆசிரியா் ஜனனி நன்றி கூறினாா். விழாவில், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் முருகேசன், நா்சரி பள்ளி முதல்வா் கவிதா, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் பிரவீனா, ராமமூா்த்தி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா் மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.