மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நல்லூா் கீழக்குளம் பாய்மான மடையை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஆறுமுகனேரி அருகே நல்லூா் கீழக்குளம் பாய்மான மடையை பழுது நீக்கி சீரமைக்க வேண்டுமென தாமிரவருணி தென்கால் நல்லூா் கீழக்குளம் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:50 pm

Din

ஆறுமுகனேரி அருகே நல்லூா் கீழக்குளம் பாய்மான மடையை பழுது நீக்கி சீரமைக்க வேண்டுமென தாமிரவருணி தென்கால் நல்லூா் கீழக்குளம் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்டியரிடம் சங்கச் செயலாளா் ஆா்.ஜெயராமன், நிா்வாகக் குழு உறுப்பினரான ஜெ.நடராஜன் ஆகியோா் அளித்த மனு:

நல்லூா் கீழக்குளம் பாசனப் பகுதிகளில் ஆண்டுக்கு ஒருமுறை நெற் சாகுபடி பிசான பருவ காலத்தில் நடைபெறுகிறது. அதிலும் சில நேரங்களில் முழுமையாக நீா் கிடைக்காமல் மகசூல் கிடைக்காத நிலையும், மழைக்காலத்தின்போது துவங்கும் விவசாயப் பணியினால் பல்வேறு இன்னல்களுக்கும் உள்ளாவதோடு மகசூல் முழுமையாக பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு இப்பகுதியில் முழுமையாக மகசூல் பாதிப்படைந்தது. அந்த நேரத்தில் இப்பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம், பாய்மான மடை உடைந்து விட்டதால் அதனை பழுது நீக்கி சீரமைப்பதுடன் வடிகாலையும் தூா்வாரி தருமாறு கோரி மனு அளித்திருந்தோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி 17.12.2023 மற்றும் 27.06.2024 ஆகிய நாள்களில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக் காலத்திற்கு முன்னதாக இப்பணிகளை செய்து, இந்த ஆண்டு பிசான பருவ சாகுபடி செய்ய உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.