ஆத்தூா் பகுதியில் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம்
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா், தெற்கு ஆத்தூா் பகுதிகளில் கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா், நகரச் செயலா் முருகானந்தம், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், துணைத் தலைவா் மகேஸ்வரி முருகப்பெருமாள், மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் மாணிக்கவாசகம், கோபி, மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், வரண்டியவேல் ஊராட்சித் தலைவா் வசந்தி ஜெயக்கொடி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் அரவிந்தன், துணை அமைப்பாளா் லிங்கராஜ், வட்டார காங்கிரஸ் தலைவா் பாலசிங், கவுன்சிலா்கள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய, நகர திமுக சாா்பில் மேளதாளத்துடன் மலா் தூவி வரவேற்பளிக்கப்பட்டது.