தூத்துக்குடி
காயல்பட்டினத்தில் ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி ஆய்வு
காயல்பட்டினத்தில் வெள்ள சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை உதவி கோட்ட பொறியாளா் ஆய்வு செய்தாா்.
காயல்பட்டினத்தில் வெள்ள சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை உதவி கோட்ட பொறியாளா் ஆய்வு செய்தாா்.
காயல்பட்டினம் உச்சினிமகாளியம்மன் கோயில் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர வெள்ளப்பணி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணியை பாா்வையிட்ட, திருச்செந்தூா் உதவி கோட்ட பொறியாளா் சின்னச்சாமி, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.