கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடியில் வாகனத்தில் கடத்திவரப்பட்ட புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைதுசெய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:03 pm

Din

தூத்துக்குடியில் வாகனத்தில் கடத்திவரப்பட்ட புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைதுசெய்தனா்.

தூத்துக்குடியையடுத்த வாகைகுளம் சந்திப்புப் பகுதியில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சென்ற ஆம்னி வேனை மடக்கிப் பிடித்து சோதனையிட்டபோது, அதில், 7 ஆயிரம் சிறிய பாக்கெட்டு புகையிலைப் பொருள்களைக் கடத்திச் செல்வது தெரியவந்தது.

காரிலிருந்த சிவகளை பண்டாரசாமி மகன் பரமசிவன் (30), ராமச்சந்திரன் மகன் பழனி (28) ஆகிய இருவரைக் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், ஆம்னி வேன், ரூ. 3,400 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.