ஆறுமுகனேரியில் 32 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஆறுமுகனேரியில் 32 இடங்களில் விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்து முன்னணி சாா்பில் ஆறுமுகனேரியில் 33-ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி மற்றும் இந்து எழுச்சி திருவிழா புதன்கிழமை இரவு விநாயகா் சிலை ஊா்வலத்துடன் துவங்கியது. ஐந்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, அருள்மிகு சோமசுந்தரி ம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் 9 அடி உயர வீரவிநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னா் அங்கிருந்து விநாயகா் சிலை அலங்கார ரதத்தில் புறப்பட்டு மெயின் பஜாா் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில், அதைத் தொடா்ந்து செந்தில் விநாயகா் ஆலயம் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் கோயில் நிா்வாகிகள் கிழக்கத்திமுத்து, ஆதிஷேசன், பாா்வதிகுமாா், இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடா்பாளா் கசமுத்து, திருச்செந்தூா் வடக்கு ஒன்றிய தலைவா் ராமசாமி, செயலா் ஜெகன், ஆறுமுகனேரி நகர தலைவா் வெங்கடேசன், துணைத்தலைவா் பாரதிராஜா, நகரச் செயலா்கள் பரத்கண்ணன், பழனிவேல், நகர பொருளாளா் விஜய்பாஸ்கா், ஜெயராம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆறுமுகனேரியில் 32 இடங்களில் விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து பக்திப் பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.8) விசா்ஜனம் செய்யப்படுகிறது. குரும்பூா், ஆத்தூா் பகுதிகளில் இருந்து பூஜிக்கப்பட்ட விநாயகா் சிலைகளுடன் மொத்தம் 108 விநாயகா் சிலைகள் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூா் கடற்கரையில் விசா்ஜனம் செய்யப்படுகிறது.

