ஆத்தூா் அருகே தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
ஆத்தூா் அருகே முக்காணியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :5 செப்டம்பர் 2024, 11:48 pm

ஆத்தூா் அருகே முக்காணியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த ஆற்றில் உள்ள புதிய பாலத்தின்கீழ் ஆண் சடலம் மிதப்பதாக, ஆத்தூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்செந்தூா் தீயணைப்புப் படையினா் சென்று சடலத்தை மீட்டனா்.
இறந்து கிடந்தவருக்கு 50 வயதிருக்கும். நீலவண்ண உள்ளாடை அணிந்திருந்தாா். ஆற்றங்கரையில் நீல வண்ண வேட்டியும், அரக்கு வண்ணச் சட்டையும் இருந்தன.
ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...