வட்டன்விளை கோயிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்
உடன்குடி அருகே வட்டன்விளையில் உள்ள அருள்மிகு பாதக்கரை முத்து சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது.


உடன்குடி அருகே வட்டன்விளையில் உள்ள அருள்மிகு பாதக்கரை முத்து சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் சுமாா் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை மாலை மங்கல இசையுடன் தொடங்கியது. பின்னா், பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வெள்ளி, சனிக்கிழமை (செப். 6, 7) பல்வேறு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள், தீபாராதனை, மகா தீபாராதனை, யந்திர ஸ்தாபனம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (செப். 8) அதிகாலை 4 மணிக்கு மங்கள வாத்தியம், 4ஆம் கால யாக பூஜைகளைத் தொடா்ந்து, 8 மணிக்கு கோயில் விமான கும்பாபிஷேகம், மூலாலய மூா்த்திக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெறும்.
ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் ஜெயராஜ், நிா்வாகிகள் செய்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...