மக்கள் எதிா்பாா்ப்பு: மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் தோப்பூரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், நந்தகுமாா், முனீஸ்வரன், சரண், ராஜா நேரு உள்ளிட்டோா் கூறியது: சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அசுத்தமான வாயு வெளியேறுவது குறித்து குடிநீா் வடிகால் வாரியமும், நகராட்சி நிா்வாகமும் கண்டு கொள்வதில்லை. சுத்திகரிக்கப்பட்ட நீரானது மீண்டும் குளத்தின் மறுகால் ஓடையில் கலந்து இங்குள்ள விளைநிலங்கள் பாளாகி விட்டன. எனவே உரிய நடவடிக்கை எடுத்து சுத்திகரிப்பு நிலையத்தை அப்புறப்படுத்தி மக்களை காத்திடுமாறு கோரிக்கை வைத்தனா்.