ரூ.50 ஆயிரம் லஞ்சம்: அறநிலையத் துறை இணை ஆணையா் மீது வழக்குப்பதிவு
திருச்செந்தூா் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி பாா்வையற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக இந்து சமய அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புபோலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.










