இளைஞரை தாக்கிய வழக்கில் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் நிலத் தகராறு காரணமாக இளைஞரைத் தாக்கிய வழக்கில் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


தூத்துக்குடியில் நிலத் தகராறு காரணமாக இளைஞரைத் தாக்கிய வழக்கில் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி சுந்தரராமபுரத்தைச் சோ்ந்த செந்தில் ஆறுமுகம் மகன் மாரியப்பன்(35). பிளம்பரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா்களான சுப்பையா மகன் சண்முக கந்தவேல்(50), செல்வராஜ் மகன் ஜோதி நவநீதகிருஷ்ணன்(34) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாம். இது தொடா்பான பிரச்னையில், சண்முக சுந்தரம், நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரும் மாரியப்பனை கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கினராம்.
இதில், காயமடைந்த அவா்தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து சண்முக சுந்தரம், நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி சுமதி விசாரித்து, சண்முக சுந்தரம், நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் முருகபெருமாள் வாதாடினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...