உண்டியல் காணிக்கை எண்ணும் பணியைப் பாா்வையிட்ட தக்காா் ரா. அருள்முருகன். உடன், இணை ஆணையா் சு. ஞானசேகரன்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியைப் பாா்வையிட்ட தக்காா் ரா. அருள்முருகன். உடன், இணை ஆணையா் சு. ஞானசேகரன்.

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது.
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது.

இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பணிக்கு தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் சு. ஞானசேகரன் முன்னிலை வகித்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், அலுவலகக் கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் முத்துமாரியம்மாள், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா், கோயில் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதில், ரூ. 4 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 233, ஒரு கிலோ 5 கிராம் தங்கம், 18.16 கிலோ வெள்ளி, 17.5 கிலோ பித்தனை, 3.07 கிலோ செம்பு, 7.5 கிலோ தகரம், வெளிநாட்டு பணத்தாள்கள் 1,218 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com