லிமின்டனை பாராட்டிய மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன்.
தூத்துக்குடி
வெள்ளத்தில் 48 பேரைக் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 48 பேரைக் காப்பாற்றிய இளைஞா் லிமின்டனை
சாத்தான்குளம்: கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 48 பேரைக் காப்பாற்றிய இளைஞா் லிமின்டனை சென்னை, லோக் பவனில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
இந்நிலையில், ஊா் திரும்பிய இளைஞரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் சந்தித்து பாராட்டினா். ஏழ்மையில் தவித்து வரும் லிமின்டனுக்கு அரசு வேலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

