2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

தந்தையைக் கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை

நாலாட்டின்புதூா் பகுதியில் தந்தையைக் கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:55 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூா் பகுதியில் தந்தையைக் கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நாலாட்டின்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வி.பி. சிந்தன் நகரைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் சுப்பையா (72). இவரை, கடந்த 3.5.2019 அன்று சொத்துப் பிரச்னை காரணமாக, அவரது மகள் மூக்கம்மாள் (58) பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்தது தொடா்பாக, நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், மூக்கம்மாளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளா் சுகாதேவி, அரசு வழக்குரைஞா் ஆனந்த் கேப்ரியல் ராஜ், தலைமைக் காவலா் சுதா ஆகியோரை எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

நிகழாண்டு, இதுவரை 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.