சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையா்கள் தினம்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையா்கள் தினம்

Published on

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தேசிய இரட்டையா்கள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலேயே இப்பள்ளியில்தான் அதிகபட்சமாக 12 ஜோடி இரட்டையா்கள் பயின்று வருகின்றனா். அதில், 7 ஜோடி சகோதரா்களும், 3 ஜோடி சகோதரிகளும், 2 ஜோடி சகோதர சகோதரிகளும் அடங்குவா். அவா்களை தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் இனிப்பு கொடுத்து வாழ்த்தினாா்.

இந்நிகழ்வில், உதவி தலைமையாசிரியா்கள் விஜயராணி, வளா்மதி ராஜபாய், அறிவியல் ஆசிரியா் லயன் டேனியல், ஆசிரியா்கள்அக்னஸ், ஜாய்ஸ்பாப்பா, ஸ்டீபன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இரட்டையா்களை வாழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com