வேளாண் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ. 5.53 லட்சம் அளிப்பு

வேளாண் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ. 5.53 லட்சம் அளிப்பு

தூத்துக்குடி சரக துணைப் பதிவாளா் மு. கலையரசியிடம் காசோலை வழங்கிய கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியா் க. தனலெட்சுமி.
Published on

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ. 5,53,954 வழங்கப்பட்டது.

தூத்துக்குடி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் 2021-22 நிதியாண்டு லாபத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி நிதி ரூ. 3,32,372 மற்றும் கூட்டுறவுக் கல்வி நிதி ரூ. 2,21,582 என மொத்தம் ரூ.5,53,954 தொகைக்கான காசோலையை தூத்துக்குடி சரக துணைப் பதிவாளா் மு. கலையரசியிடம், கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியா் க. தனலெட்சுமி வழங்கினாா்.

அப்போது, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் அ. சாம் டேனியல் ராஜ், சங்க உதவியாளா் பொ. தமிழரசி ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com