சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சனேயா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சனேயா்.

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சனேயா்.
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ சித்தா் பீடத்தில் ஆஞ்சனேயா், தியான ஆஞ்சனேயராக எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தியான ஆஞ்சனேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சனேயருக்கு சீனிவாச சித்தா் தலைமையில் பால், பன்னீா், தேன், தயிா், சந்தனம் உள்ளிட்ட 27 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து, ஆஞ்சனேயருக்கு வடை, துளசி, வெற்றிலையால் சிறப்பு அலங்காரம், மகா பிரத்தியங்கிரா தேவி, கால பைரவருக்கு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நிறைவில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com