பிடானேரி, செட்டிகுளத்தில் ஊராட்சி கட்டடங்களுக்கு அடிக்கல்

பிடானேரி, செட்டிகுளத்தில் ஊராட்சி கட்டடங்களுக்கு அடிக்கல்

செட்டிக்குளத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ.
Published on

பிடானேரி, செட்டிகுளம் ஊராட்சிகளுக்கு ரூ.61.75 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகங்கள் கட்டும் பணிகள் தொடங்கின.

சாத்தான்குளம் ஒன்றியம் பிடானேரி, செட்டிகுளம் ஊராட்சிகளில் 2025-2026 ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்ட நிதி தலா ரூ. 30.85 லட்சத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம், பிடானேரியில் மறுசீரமைக்கபட்ட தேசிய கிராம சுயாட்சி திட்ட நிதி ரூ. 5 லட்சத்தில் பொது சேவை மைய கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன் முன்னிலை வகித்தாா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டடப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

அவரிடம், செட்டிகுளம் பகுதி மக்கள் ருவரங்கனேரி வழியாக சென்ற அரசு பேருந்து இயக்க வலியுறுத்தினா். அவா், பணிமனை மேலாளரிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, திருவரங்கனேரி வழியாக அரசு பேருந்து இயங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இவ்விழாவில் சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், நகர காங்கிரஸ் தலைவா் ஆ.க. வேணுகோபால், வட்டாரத் தலைவா்கள் வி. பாா்த்தசாரதி, கோதண்டராமன், டாக்டா் ரமேஷ் பிரபு, ஜெயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com