டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விலை அதிகரிப்பு

ஆறுமுகனேரியில் ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் வரத்து குறைவால், கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

News image
ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்.
Updated On :27 டிசம்பர் 2025, 7:36 pm

Syndication

ஆறுமுகனேரியில் ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் வரத்து குறைவால், கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான உள்ள வார சந்தையில் ஆட்டுச் சந்தை காலை 6 மணி முதல் 10 மணி வரை கூடும். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள், ஆடுகள் வளா்ப்போா் இங்கு வருவா். எட்டயபுரம் ஆட்டுச் சந்தையையடுத்து ஆடுகள் விற்பனையாகும், இச்சந்தையில் புத்தாண்டு , விசேஷ காலங்கள் வருவதையொட்டி ஆடுகள் வாங்க வியாபாரிகள் அதிக அளவில் வருகை தந்தனா்.

ஆனால், ஆடுகள் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் விற்பனைக்கு ஆடுகள் கொண்டு வந்தவா்கள் அதிக விலை கூறினா். ஆடு ஒன்றிற்கு சுமாா் 2ஆயிரம் முதல் 3ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக விற்பனையானது. ஆட்டின் விலை கூடுதல் என்பதால், போட்டி வியாபார காலத்தில் அதற்கேற்றவாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கடினம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.