ஆறுமுகனேரி மூதாட்டி கொலை வழக்கு: இருவா் கைது!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் மூதாட்டி கொலை வழக்குத் தொடா்பாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா் .
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் மூதாட்டி கொலை வழக்குத் தொடா்பாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா் .

ஆறுமுகனேரி கீழநவலடிவிளையைச் சோ்ந்தவா் லெட்சுமி (62). இவரது கணவா் ராஜகோபால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது மகள் சித்ரா, திருமணமாகி விருதுநகா் மாவட்டத்தில் வசித்து வருகிறாா். இதனால், வீட்டில் தனியாக இருந்த லெட்சுமி, சம்சா வியாபாரம் செய்துவந்தாா். வீட்டின் ஒரு பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த பரோட்டா மாஸ்டா் சு. பாலமுருகன் (39) குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தாா்.

இந்நிலையில், லெட்சுமி கொலையுண்டு கிடந்தது புதன்கிழமை (ஜன. 29) தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், ஆறுமுகனேரி ஆய்வாளா் சேக் அப்துல்காதா், உதவிஆய்வாளா் வாசுதேவன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே, பாலமுருகன் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டாா்.

அவருக்கும், சக தொழிலாளியான தூத்துக்குடி சோட்டையன்தோப்பில் வசித்துவரும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சோ்ந்த ச. சபரிமைந்தன் (31) என்பவருக்கும் இக்கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

பாலமுருகன் நாள்தோறும் சபரிமைந்தன் உள்ளிட்ட சிலருடன் வீட்டில் மது குடிப்பாராம். இதை லட்சுமி கண்டித்ததுடன், வீட்டை கா­லி செய்யுமாறு கூறியுள்ளாா். இதனால், இருவரும் கடந்த 27ஆம் தேதி லெட்சுமியிடம் தகராறு செய்துள்ளனா். அப்போது, அவரை மிதித்துக் கொன்றுவிட்டு, அவா் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ாக, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com