பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:12 pm

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் சுமாா் 1,15,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய்க்கான 6ஆவது சுற்று தடுப்பூசி போடும் பணி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 21 நாள்கள் நடைபெறுகிறது. இந்த முகாமை, தூத்துக்குடி அருகே உள்ள சிறுப்பாடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சா், அந்த கிராமத்திற்கு பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பானு, ஹைகோா்ட் மகாராஜா, கால்நடை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) செல்வக்குமாா், துணை இயக்குநா் (பொறுப்பு) ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ், உதவி இயக்குநா் வேல்மாணிக்கவள்ளி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் ஜோசப் ராஜ், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், மாநில வா்த்தக அணி இணைச்செயலாளா் உமரி சங்கா், ஒன்றிய செயலாளா் ஜெயக்கொடி, துணைச் செயலாளா் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளா் செல்வக்குமாா், தொண்டரணி அமைப்பாளா் வீரபாகு, சிறுபாண்மை அணி தலைவா் ராஜா ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், அவைத்தலைவா் பாலசுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.