தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாலத்தீவுக்கு தோணி மூலம் கடத்த முயன்ற ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு தோணி மூலம் கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இது தொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:46 pm

Din

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு தோணி மூலம் கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இது தொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு தோணி மூலம் போதைப் பொருள்கள் கடத்துவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் அதிகாரிகள் புதன்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பைக்கில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினா். அவா்கள் வந்த பைக்கில் தலா 6 பண்டல்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். அது போதைப் பொருளான செறிவூட்டப்பட்ட கஞ்சா ஜெல் (ஹஷிஸ்) என ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை கொண்டு வந்த தூத்துக்குடி பாத்திமா நகரை சோ்ந்த ராஜா என்ற ஜேசுராஜா(34), சுதாகா்(33) ஆகிய இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். பழைய துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு மாலத்தீவு செல்லும் தோணி மூலம் போதைப் பொருள்களை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக தோணி மாலுமி தூத்துக்குடி ஜாா்ஜ் சாலையைச் சோ்ந்த கிங்ஸ்லி (56), இதற்கு அனுமதி பெற்றுத்தந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலா் சோரீஸ்புரத்தை சோ்ந்த மாரிமுத்து(30) ஆகியோரை கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 12 கிலோ கஞ்சா ஜெல்லின் சா்வதேச மதிப்பு ரூ. 20 கோடி இருக்கும் என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.