தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தோனேசியாவிலிருந்து பாக்குகள் கடத்தல் வழக்கு: மாமன்ற உறுப்பினா் கைது

இந்தோனேசியாவிலிருந்து பாக்குகள் கடத்தல் வழக்கு

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:47 pm

Din

இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் சுமாா் 22 டன் கொட்டைப் பாக்குகள் கடத்திய வழக்கில் ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தூத்துக்குடி மாமன்ற உறுப்பினா் ஒருவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கொட்டைப் பாக்கை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கடந்த டிசம்பா் மாதம் இந்தோனேசியாவில் இருந்து முந்திரிகொட்டை இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்ட கண்டெய்னரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.

ஆனால், அதில் சுமாா் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான 22 டன் கொட்டைப்பாக்குகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி மாநகராட்சி 18ஆவது வாா்டு உறுப்பினா் ஜான் என்ற சீனிவாசனை(44) மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா்.