தூத்துக்குடி: தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்படி, விவிடி சிக்னல் அருகே தூத்துக்குடி, கோவில்பட்டி கட்டடப் பொறியாளா் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க சாசனத் தலைவா் ஹென்றி டேனியல் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் ஜாண்சன், முன்னாள் தலைவா் குமரேசன், செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தரமான கல் குவாரி பொருள்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரி உரிமையாளா்களின் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். குவாரிகளை பொதுப்பணித் துறை மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும். சிமெண்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த அவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் உழைப்பாளா் சிலைக்கு மரியாதை

ஆட்சியரகம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


