போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மத்திய கண்காணிப்பு ஆணைய கூடுதல் செயலா் அா்த்தி சி. ஸ்ரீவஸ்தவா.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மத்திய கண்காணிப்பு ஆணைய கூடுதல் செயலா் அா்த்தி சி. ஸ்ரீவஸ்தவா.

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனாா் துறைமுகத்தில், கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடி வ. உ. சிதம்பரனாா் துறைமுகத்தில், கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய கண்காணிப்பு ஆணைய கூடுதல் செயலா் அா்த்தி சி. ஸ்ரீவஸ்தவா கலந்துகொண்டு, துறைமுகத்தின் வளா்ச்சி மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட பசுமை மற்றும் தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை பாராட்டினாா். செயற்கை நுண்ணறிவின் பங்கையும், முன்னறிவிப்பு விழிப்புணா்வையும் எடுத்துரைத்த அவா், ஊழலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா். மேலும், பட்ங் யா்ண்ஸ்ரீங் ா்ச் யண்ஞ்ண்ப்ஹய்ஸ்ரீங் எனும் புத்தகத்தை அவா் வெளியிட்டாா். தொடா்ந்து, கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் 2025 இன் ஒரு பகுதியாக துறைமுகம் ஏற்பாடு செய்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

துறைமுக ஊழியா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி பி. கவின் மகாராஜ் வரவேற்றாா். துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஆா்.பத்மநாபன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com