தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

Published on

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயா் தலைமை வகித்து பேசினாா். வங்கியின் நிா்வாக இயக்குநா் வின்சென்ட், முன்னாள் இயக்குநா் சி.எஸ். ராஜேந்திரன், இயக்குநா் கே. ராமச்சந்திரன் ஆகியோா் வங்கியின் செயல்பாடுகள் குறித்து பேசினா்.

இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வங்கியின் புதிய சேவைகளை வெளியிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உருவாகி வரும் குலசேகரன்பட்டினம் விண்வெளி ஏவுதளம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குறைந்த செலவில் ஏவுதளம் நடத்தக் கூடியதன் காரணமாக, இத்தளம் அமெரிக்காவின் பிளோரிடா போன்று உலகளாவிய விண்வெளி மையமாக மாற்றப்படும்.

உள்ளூா் விண்வெளி ஸ்டாா்ட் அப், சிறு குறு நிறுவனங்களுடன் இணைந்து வங்கியின் நிதி வலிமையை நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணைக்க தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கிக்கு சிறந்த வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, பள்ளி மாணவா்களின் கலாசார நிகழ்ச்சிகள், தனியாா் தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ் குழுவினரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில், வங்கி அதிகாரிகள், அலுவலா்கள், அவா்களின் குடும்பத்தினா், வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

வங்கியின் நிறுவன நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய மண்டலங்களில் சிறப்புக் கடன் முகாம் நடத்தப்பட்டு 143 பயனாளா்களுக்கு ரூ. 128.15 கோடி கடன்கள் வழங்கப்பட்டன.

மேலும், பல்வேறு இடங்களில் ரத்த தான முகாம்கள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com