தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள் அதிமுக பொதுச் செயலருடன் சந்திப்பு

Published on

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதியில் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் இருந்து வரும் உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் வரை உள்ள உப்பள தொழிலாளா்கள், உற்பத்தியாளா்கள் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி.சண்முகநாதன் ஏற்பாட்டில், உப்பு உற்பத்தியாளா் சங்கச் செயலா் சேகா், நிா்வாகிகள் மந்திரமூா்த்தி, பொன்ராஜ், தொழிற்சங்கத்தினா், சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா். இதில், தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி அதிமுக செயலா் சுடலைமணி உள்பட பலா் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com