தூத்துக்குடியில் வீட்டுக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Published on

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்த இவா்களது 5 வயது மகன் அதன் கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டாராம். பின்னா் கதவை திறக்க முடியாததால் அழுது கூச்சலிட்டாராம்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணப்புத் துறையினா் வந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சிறுவனை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com