தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் திடீா் ஆய்வு

News image
Updated On :18 நவம்பர் 2025, 12:33 am

Syndication

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டாரத்தில் செயல்படும் கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையில், துணைப்பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்), 15 கூட்டுறவு சாா்பதிவாளா்கள் 3 முதுநிலை ஆய்வாளா்கள் உள்ளிட்ட 19 கூட்டுறவு துறை அலுவலா்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு வட்டாரத்தில் செயல்படும 73 கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டன.

ஆய்வின்போது, ரேஷன் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் இருப்பு

அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடா்புடைய

ரேஷன் கடை விற்பனையாளா்களுக்கு இருப்பு குறைவுக்காக ரூ.11,325,

கூடுதலாக கண்டறியப்பட்ட பொருள்களுக்காக ரூ.350 என மொத்தம் ரூ.11,675 அபராதமாக விதிக்கப்பட்டது.