கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் துறையில் பயனாளிகளின் விண்ணப்பத்தை முறையாக ஆய்வு செய்து புதிய குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். காலம் தாழ்த்தி வழங்குவதைக் கண்டிப்பது, புதிய அட்டைகள் வழங்க கையூட்டு கேட்கும் துறையின் வருவாய் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நிறுவனா் தலைவா் அன்புராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொறுப்பாளா் பொன்னுச்சாமி, மாவட்டச் செயலா் பேச்சிமுத்து, தென்மண்டல மகளிரணிச் செயலா் சுப்புலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மணிகண்டனிடம் மனு அளிக்கப்பட்டது.
