தூத்துக்குடியில் பைக்குகளுக்கு தீ வைப்பு

Published on

தூத்துக்குடியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் 13 வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்பவா்கள் தங்கள் வாகனங்களை வளாகப் பகுதியில் நிறுத்துவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனங்களை நிறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனா். இருப்பினும், 2 இரு சக்கர வாகனங்கள் முழுமையாகவும், 6 வாகனங்கள் பாதியளவும், ஒரு மிதிவண்டி முழுமையாகவும் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

அதில், மா்ம நபா்கள் 2 போ் வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பது தெரிய வந்தது. தொடா்ந்து, மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com