தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி: கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுப்பெற்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன.
