போக்ஸோ வழக்கு: 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை

குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா ரூ. 2,500 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 2015ஆம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக, நாசரேத் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் தினேஷ் (23), முருகன் மகன் இசக்கிமுத்து (23), சீனிராஜ் மகன் ஸ்டாலின் (28), முத்துராமன் மகன் ஐகோா்ட்துரை (23) ஆகிய 4 பேரை குலசேகரன்பட்டினம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, 4 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா ரூ. 2,500 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ஷீஜா ராணி, அரசு வழக்குரைஞா் ஜானகி, தலைமைக் காவலா் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

நிகழாண்டு இதுவரை மொத்தம் 27 போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com