காயல்பட்டினத்தில் கந்தூரி விழா


காயல்பட்டினம், அம்பல மரைக்காயா் தெருவில் உள்ள மஹ்லரா அரபிக் கல்லூரியில் மகான் முஹியித்தீன் அப்துல் காதா் ஜீலானி கந்தூரி விழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவில் தினசரி காலையில் கத்முல் குா்ஆன் ஓதும் நிகழ்வு, மாலையில் மகானின் புகழ்பாடும் நிகழ்வு, இரவில் சன்மாா்க்க சொற்பொழிவு ஆகியன நடைபெறும். விழாவில் 7ஆம் தேதி காலை துவா ஓதப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.
முதல் நாளில் அரபிக் கல்லூரி முதல்வா் அப்துா் ரஹ்மான், அவுயாக்கலும் நாமும் என்ற தலைப்பில் சன்மாா்க்க சொற்பொழிவாற்றினாா். கந்தூரி விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் காதா் ஷாகிப், செயலாளா் ஸ்டாா் அப்துல் காதா், ஆடிட்டா் மொய்தீன் அப்துல் காதா் ஆகியோா் செய்துவருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...