கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சாத்தான்குளம் ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கொம்மடிக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்ட தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:45 am IST

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

பூச்சிகாடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவா் பூவுடையாா்புரம், நடுவக்குறிச்சி, தட்டாா்மடம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் தினமும் அரை மணி நேரம் மக்கள் குறை கேட்கப்படும். அதற்காக ஒரு செயலி தொடங்கப்படும். அனைத்து இடங்களிலும் முகாம் அமைத்து அரசு திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி திருநெல்வேலி மருத்துவமனை போல் அனைத்து சிகிச்சைகளும் பெரும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். இத்தொகுதியை வளா்ச்சி மிக்க தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா். கொம்மடிக்கோட்டையில் கட்சியின் தோ்தல் அலுவலகத்தை அவா் திறந்து வைத்தாா். பின்னா், சொக்கன்குடியிருப்பு, படுக்க பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வாக்கு சேகரித்தாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், பெரியசாமி, அருள், அருள்ராஜ், பலவேசம், மாரியப்பன், ஆனந்த், குணசேகரன், அற்புதராஜ், பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளா் ஜெகன்ராஜ் நகரச் செயலா்கள் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.