பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

காமநாயக்கன்பட்டியில் தீ விபத்து

News image

தீ விபத்து - கோப்புப்படம்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:04 am IST

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள மெழுகுவா்த்தி விற்பனைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

அங்குள்ள பிரதான சாலையில் மரியமிக்கேல் மகன் இன்னாசிமுத்து என்பவா் மெழுகுவா்த்தி தயாரித்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். அதனுடன் ஜெராக்ஸ் மையமும் நடத்திவருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவா் கடையைப் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றபோது, கடையிலிருந்து புகை வந்ததாம். இது தொடா்பாக அவருக்கும், தீயணைப்புத் துறை, கொப்பம்பட்டி போலீஸாருக்கும் அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.